மனமார்ந்த நன்றிகள்
செயற்குழு (2023 - 2025)
யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் – கனடா
செயற்குழு (2023 - 2025)
யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் – கனடா
Page 89 of 91
யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் – கனடா தனது 30 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இத்தருணத்தில், கடந்த மூன்று தசாப்தங்களாக எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
30 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் உருவாக்க உதவிய அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகள், வரலாற்றுத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தந்து இம்மலரை சிறக்கச் செய்தவர்களுக்கும், தட்டச்சு செய்தவர்கள், மலரின் பிழைகளை சரிபார்த்தவர்கள், அச்சிட்டவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
30 ஆவது ஆண்டு நிறைவு ஒன்றுகூடல் விழாவை நடாத்துவதற்கு ஆதரவளித்த அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், நிகழ்ச்சிகளை வழங்கிய கலைஞர்கள் மற்றும் ஒழுங்கமைப்பாளர்களுக்கும், மண்டப மற்றும் உணவு ஒழுங்குகள் செய்தவர்களுக்கும், புகைப்பட மற்றும் காணொளி கலைஞர்களுக்கும், டிக்கட்டுகளை விற்க உதவியவர்களுக்கும், நிகழ்வுக்கு சமூகமளித்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
1995ஆம் ஆண்டு பனிக்கால மழையையும் பொருட்படுத்தாமல் எங்கள் சங்கத்தை உருவாக்கிய அரும்பணியாளர்களுக்கு, எமது பணிவான வணக்கங்கள். நீங்கள் தூண்டிய அக்கினி இன்று இச்சங்கத்தை தொடர்ந்தும் வெப்பமூட்டுகிறது.
முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், காப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் – நீங்கள் செலவிட்ட நேரமும் உழைப்பும், எங்களின் ஒவ்வொரு சாதனையின் பின்னணியில் உள்ள தூணாக இருக்கின்றன.
பொதுமக்கள், நன்கொடையாளர் மற்றும் நலன் விரும்பிகள் – உங்கள் நன்கொடைகள் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். நிலங்கள் வாங்கப்பட்டது, கட்டிடங்கள் கட்டப்பட்டது மற்றும் புதுப்பிக்கப்பட்டது. புலமை பரிசில்கள் வழங்கப்பட்டன – இவை அனைத்தும் உங்கள் ஆதரவால் தான்.
எமது கல்லூரியின் நிறுவனரின் வழித்தோன்றல்கள் - எமது சங்கத்தினூடான கல்லூரிக்கான வளர்ச்சிப்பணிகளில் நீங்கள் வழங்கிய நன்கொடைகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
மறைந்த நம் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு – உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எங்கள் மனங்களில் அவர்களின் நினைவுகளை நிரந்தரமாக்குகிறது. அவர்களின் கனவுகள் எங்களை வழிநடத்துகிறது.
முன்னாள் மற்றும் தற்போதைய கல்லூரி அதிபர் அவர்களுக்கு – உங்கள் வழிகாட்டுதல்களும் ஒத்துழைப்பும் எங்களின் இந்தப் பயணத்தின் அடிநாதமாக அமைந்துள்ளது.
தாய்ச் சங்கம் மற்றும் உலகம் முழுதும் உள்ள எங்கள் தோழமைச் சங்கங்களுக்கு – உங்களின் சகோதரத்துவ ஆதரவு எப்போதும் எங்களுக்கு உற்சாகத்தையளிக்கிறது.
எமது ஆண்டு உறுப்பினர்கள், ஆயுள் உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் – உங்கள் ஆழ்ந்த நம்பிக்கையும் உற்சாகப்பூர்வமான ஒத்துழைப்பும் எங்களை இந்த நீண்ட பயணத்தில் உறுதியாக முன்னேறச் செய்தது.
இந்த 30 ஆண்டு நினைவு, ஒரு முடிவல்ல – மாறாக, எங்கள் தொடர்ச்சியான சேவைப் பயணத்தில் ஒரு அருமையான மைல்கல். நாம் புலம்பெயர்ந்தாலும், எமது பாடசாலையை மறவாமல், ஒற்றுமையாக செயல்பட்டால் என்னென்ன சாதிக்க முடியும் என்பதை இந்த பயணம் நிரூபித்துள்ளது.
அன்புடன், நன்றியுடன், பெருமிதத்துடன்,