புகழ் பரப்பி புதுயுகம் படைக்கட்டும்
சைவப்பாரம்பரியத்தில் ஆங்கில கல்வியை வழங்கும் பொருட்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சைவப் பெரியார் கனகரட்ணம் முதலியார் அவர்களால் 1876 இல் வித்திடப்பட்டு, அவரின் புதல்வர் அமரர் செல்லப்பா முதலியார் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு, 1943 இல் எனது தந்தையார் தம்பையா சமாதான நீதவானால் பொறுப்பேற்கப்பட்டு, அன்றைய போர்க்கால சூழலால் 1946 இல் இலங்கையில் முதலாவது அரசாங்க கல்லூரியாக பொறுப்பேற்கப்பட்டு 150 வது அகவையை அண்மிக்கும் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் கனடாவில் அமைந்துள்ள பழைய மாணவர்கள் சங்கம் தனது 30வது அகவையை நினைவு செய்யும் விழாவுக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
கனடா பழைய மாணவர்கள் சங்கத்தின் அமைப்பு முயற்சியில் ஈடுபட்ட புண்ணிய சீலர்கள் முதலில் பாராட்டப்பட வேண்டியவர்கள். “ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இழுப்பது போல” இந்தத் தேரையும் இழுக்க வேண்டும். ஆனால் இது பத்திரமான தேர். மிக தந்திரமாக இழுக்க வேண்டும். பிரதானமாக, விக்ரோறியா கல்லூரியில் அனுமதிக்கப்படும் பாதிக்கப்பட்ட ஜீவன்களின் மனங்களை மெது மெதுவாக உயர்த்தி கொண்டு சென்று கல்வியில் அறிவைப் பூரணப்படுத்தவும் கல்லூரி அர்த்தமுள்ள நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த ஏனைய விடயங்களில் முன்மாதிரியாக செய்த பங்களிப்பைப் போல கனடா சங்கம் தமது பங்களிப்பை செய்ய வேண்டுமென வாழ்த்துகிறேன்.