கல்லூரிக் கீதம்

வாழ்க நிலமிசை வாழ்க விக்ரோறியா
வாழிய வாழியவே
வானமளாவிய ஞானக் கலை கொண்டு
மாணவர் வாழ்ந்திடவே
சூழிருள் நீக்கிடவே கனகரத்தினம் ஏற்றிய
சோதிநீ வாழியவே
தூயநல் லறிஞர் செல்லப்பாச் செம்மல்
செய்பணி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும் இன்கலை வீசி
எழில்பெற வாழியவே
எங்கள் கலைமாதா இன்பக் கலைச்செல்வி
என்றென்றும் வாழியவே
வாழ்க விக்ரோறியா வாழ்க விக்ரோறியா
வழிவழி வாழியவே
வாழ்வு விளைந்த தனைத்தும் அளித்து
வளர்க கலாலயமே.
Page 6
