வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் மா.சின்னத்தம்பி

பேராசிரியர் மா.சின்னத்தம்பி

கல்வியியல் பேராசிரியர் (ஓய்வு), மேனாள் தலைவர், கல்வியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

### வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் மா.சின்னத்தம்பி **வாழ்த்துச் செய்தி : சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி கனடா பழைய மாணவர் மன்ற முப்பதான்டு நிறைவு.** பெருமைக்குரிய நிர்வாக சபையினரே, அங்கத்தவர்களே, வரலாற்று பெருமைமிகு சோழர் புரம் என்பது மருவி சுழிபுரம் ஆகியுள்ளது. இங்கு நிலை பெற்ற, புகழ் பெற்ற கல்லூரியே விக்ரோறியா கல்லூரி. இப்பிரதேசத்தின் கல்வியும், ஒழுக்கமும், சமூக பண்பாடும் செழுமையுற விக்ரோறியா பாடுபடுகிறது. பெற்ற தாயை போல் பிறந்த மண்ணும், பேசும் மொழியும், கற்ற கல்வியும் உன்னதமானவை; ஒப்பற்றவை. இதனை உணர்ந்து ஒருதலைமுறைக்காலமாக இங்கே பழைய மாணவர் மன்றத்தை நிறுவி, ஒற்றுமையோடும், பெருமையோடும் வளர்த்து வருகின்றீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்கள். புலம்பெயர்ந்து குடியேறிய இந்த அழகிய நாட்டில், தங்களது வாழ்வை புதிதாய் நிலை நிறுத்தியுள்ளீர்கள்; அச்சுறுத்தும் கொடும்பனியிலும் கடினமாக உழைக்கின்றீர்கள்; அதேசமயம் அந்த கல்லூரியை மனதில் நிறுத்தி அதன் வளர்ச்சிக்கு உங்கள் நேரத்தையும், நிதியையும், சிந்தனையையும் தொடர்ந்து வழங்கி வருகின்றீர்கள். இதற்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள். உங்கள் முனைப்பு, ஒற்றுமை, நன்றி உணர்வு, செயல்திறன், உண்மை ஈடுபாடு என்பவற்றால் கனடா பழைய மாணவர் மன்றம் பெருமையோடு பெரு வளர்ச்சி கண்டுள்ளது. வாழ்த்துக்கள். விக்ரோறியாவில் பொருளியல் ஆசிரியனாக எனது முப்பத்து ஐந்தாவது வயதிலிருந்து எட்டு ஆண்டுகள் பணியாற்றினேன். என் அன்பு மாணவர் பலர் மூளை இல்லாத துப்பாக்கிகளால் கொல்லப்பட்டனர். துன்பியல் உணர்வோடு கற்பித்தேன். ஆனாலும் அன்பையும் பெருமையையும் பல மாணவர்கள் நிறையவே தந்தனர். இருளும் ஒளியும் நிறைந்த அந்த நாட்கள் நினைவில் நிறைந்து கிடக்கின்றன. அக்காலத்தில் என்னிடம் படித்த பல மாணவர்களை தங்கள் வருடாந்த ஒன்று கூடலில் சந்தித்தேன்; கண்டேன்; மகிழ்ந்தேன்; உரையாடினேன். உணர்வுகளை பரிமாறினேன். அதற்கு நன்றிகள். உங்கள் மன்றம் ஒற்றுமையோடும், உண்மையோடும் செயல்பட என் வாழ்த்துக்கள். காலம் உங்களைப் பலப்படுத்தட்டும்; நம்பிக்கை கொள்ளுங்கள். தமிழ் மொழியும் தமிழர் தம் பண்பாடும் வளர்க! விக்ரோறியா கல்லூரி விருட்சமாக வளர்க! கனடா பழைய மாணவர் மன்றம் சிறப்புற்று செழுமை பெற்று வளர்க!

வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் மா.சின்னத்தம்பி

வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் மா.சின்னத்தம்பி

பேராசிரியர் மா.சின்னத்தம்பி

கல்வியியல் பேராசிரியர் (ஓய்வு), மேனாள் தலைவர், கல்வியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

வாழ்த்துச் செய்தி : சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி கனடா பழைய மாணவர் மன்ற முப்பதான்டு நிறைவு.

பெருமைக்குரிய நிர்வாக சபையினரே, அங்கத்தவர்களே,

வரலாற்று பெருமைமிகு சோழர் புரம் என்பது மருவி சுழிபுரம் ஆகியுள்ளது. இங்கு நிலை பெற்ற, புகழ் பெற்ற கல்லூரியே விக்ரோறியா கல்லூரி. இப்பிரதேசத்தின் கல்வியும், ஒழுக்கமும், சமூக பண்பாடும் செழுமையுற விக்ரோறியா பாடுபடுகிறது.

பெற்ற தாயை போல் பிறந்த மண்ணும், பேசும் மொழியும், கற்ற கல்வியும் உன்னதமானவை; ஒப்பற்றவை. இதனை உணர்ந்து ஒருதலைமுறைக்காலமாக இங்கே பழைய மாணவர் மன்றத்தை நிறுவி, ஒற்றுமையோடும், பெருமையோடும் வளர்த்து வருகின்றீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்கள்.

புலம்பெயர்ந்து குடியேறிய இந்த அழகிய நாட்டில், தங்களது வாழ்வை புதிதாய் நிலை நிறுத்தியுள்ளீர்கள்; அச்சுறுத்தும் கொடும்பனியிலும் கடினமாக உழைக்கின்றீர்கள்; அதேசமயம் அந்த கல்லூரியை மனதில் நிறுத்தி அதன் வளர்ச்சிக்கு உங்கள் நேரத்தையும், நிதியையும், சிந்தனையையும் தொடர்ந்து வழங்கி வருகின்றீர்கள். இதற்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள். உங்கள் முனைப்பு, ஒற்றுமை, நன்றி உணர்வு, செயல்திறன், உண்மை ஈடுபாடு என்பவற்றால் கனடா பழைய மாணவர் மன்றம் பெருமையோடு பெரு வளர்ச்சி கண்டுள்ளது. வாழ்த்துக்கள்.

விக்ரோறியாவில் பொருளியல் ஆசிரியனாக எனது முப்பத்து ஐந்தாவது வயதிலிருந்து எட்டு ஆண்டுகள் பணியாற்றினேன். என் அன்பு மாணவர் பலர் மூளை இல்லாத துப்பாக்கிகளால் கொல்லப்பட்டனர். துன்பியல் உணர்வோடு கற்பித்தேன். ஆனாலும் அன்பையும் பெருமையையும் பல மாணவர்கள் நிறையவே தந்தனர். இருளும் ஒளியும் நிறைந்த அந்த நாட்கள் நினைவில் நிறைந்து கிடக்கின்றன.

அக்காலத்தில் என்னிடம் படித்த பல மாணவர்களை தங்கள் வருடாந்த ஒன்று கூடலில் சந்தித்தேன்; கண்டேன்; மகிழ்ந்தேன்; உரையாடினேன். உணர்வுகளை பரிமாறினேன். அதற்கு நன்றிகள்.

உங்கள் மன்றம் ஒற்றுமையோடும், உண்மையோடும் செயல்பட என் வாழ்த்துக்கள். காலம் உங்களைப் பலப்படுத்தட்டும்; நம்பிக்கை கொள்ளுங்கள்.

தமிழ் மொழியும் தமிழர் தம் பண்பாடும் வளர்க! விக்ரோறியா கல்லூரி விருட்சமாக வளர்க! கனடா பழைய மாணவர் மன்றம் சிறப்புற்று செழுமை பெற்று வளர்க!

Page 56