கனடா விக்ரோறியா பழைய மாணவர் சங்கம், கனடா OSA என்ற விக்ரோறியாவின் பழைய மாணவர் அமைப்பானது தனது 30வருட நிறைவு நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.
புலம்பெயர் நாடுகளிலே உள்ள விக்ரோறியாவின் பழைய மாணவர் அமைப்புகளிலேயே ஒரு பெரிய பலமான அமைப்பாக கனடா பழைய மாணவர் அமைப்பு விளங்குகிறது.
அவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக எமது கல்லூரியின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டுள்னர் என்பது பலரும் அறிந்ததே, அவர்களின் பணி எமது கல்லூரிக்கு மிகவும் அவசியமானது. அவர்களின் உதவியால் எமது கல்லூரி மேன்மேலும் வளர்ச்சியடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நோர்வேயை பொறுத்தமட்டில் இங்கு விக்ரோறியாவின் பழைய மாணவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். இங்கு உள்ளவர்களை ஒன்றிணைத்து ஒரு பழைய மாணவர் அமைப்பை ஆரம்பித்துள்ளோம்.
எமது கல்லூரியின் 150 வது ஆண்டுவிழாவை சிறப்பாக செய்வதற்காக அனைத்துலக விக்ரோறியா பழைய மாணவர் அமைப்புகளோடும் ஒன்றிணைந்து பயணிக்க நாங்கள் தயாராகவுள்ளோம்.
எமது நோக்கம் ஒன்றே. ஒற்றுமையே பலம்.
கனடா பழைய மாணவர் சங்கத்தின் GALA Dinner என்ற 30 ஆவது ஆண்டு விழாவிற்கு எனக்கும் சிறப்பு அழைப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
இவ்விழா சிறப்பாக அமைய நோர்வே விக்ரோறியா பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் எமது வாழ்த்துகளும் நன்றிகளும்.