வாழ்த்துச் செய்தி - பழைய மாணவர் சங்கம், ஜெர்மனி

கதிர்காமநாதன் முருகதாசன்

தலைவர், பழைய மாணவர் சங்கம், ஜெர்மனி

### வாழ்த்துச் செய்தி - பழைய மாணவர் சங்கம், ஜெர்மனி ஈழவளநாட்டின் உச்சியில் உள்ள புகழ்மிகு யாழ்ப்பாணம் சோழியபுரமாம் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை தனது முப்பதாவது அகவை நிறைவை கொண்டாடுவதை இட்டு மிக்க மனமகிழ்ச்சி அடைவதுடன், இந்த முப்பதாவது ஆண்டு நிறைவு விழா மிக சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எமது கல்லூரியானது தனக்கென ஒரு பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டு அளப்பெரிய கல்விச்சேவையை எமது ஊரவர்க்கும் அயல் கிராமங்களுக்கும் ஆற்றி வருகிறது. அத்தோடு கூடி வாழ்ந்த எம்மை, தனித்து வாழும் தேசங்களில் தூக்கி எறியப்பட்ட போதினிலும், பனி படர்ந்த தேசங்களில் பாஷை தெரியாத ஊர்களில் தனித்து விடப்பட்டபோதினிலும், எம்மை எல்லாம் அந்தந்த நாடுகளில் தடம் பதித்து நிமிர்ந்து நிற்க உதவியதும், எமது கல்லூரி தந்த அறிவு என்பதை மறக்கவோ மறைக்கவோ முடியாது. இப்படிப்பட்ட கல்விச்சேவையை செய்யும் எம் கல்லூரிக்கு மேலும் வலுவூட்டி எம்மை வழி தெரியாத ஊர்களில் விழி பிதுங்கி நிற்கும் வேளை, வழி காட்டிய அந்த கல்லூரி தாய்க்கு நன்றி செலுத்துவது மட்டுமல்லாமல் உறுதுணையாக நிற்பதும் எமது தலையாய கடமையாகும். அந்தவகையில் கனடா பழைய மாணவர் சங்கம் கடந்த முப்பது வருடமாக எமது பாடசாலை முன்னேற்றத்திற்கு தோளோடு தோள் நின்று பலவிதமான உதவிகளை வழங்கி வருகின்றது என்பதை இங்கு குறிப்பிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இன்று பல நாடுகளில் கிளை பரப்பியுள்ள எமது யாழ் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி பழைய மாணவர் சங்கம், மேலும் பல நாடுகளில் கிளை பரப்ப வேண்டும் என வேண்டிக்கொண்டு, தொடர்ந்தும் பல்லாண்டு காலம் சிறப்புடன் ஒன்றிணைந்து செயல்பட்டு, எமது பாடசாலை அன்னைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் உறுதுணையாக நிற்க உளமார வேண்டி நிற்கிறேன். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”

வாழ்த்துச் செய்தி - பழைய மாணவர் சங்கம், ஜெர்மனி

வாழ்த்துச் செய்தி - பழைய மாணவர் சங்கம், ஜெர்மனி

கதிர்காமநாதன் முருகதாசன்

தலைவர், பழைய மாணவர் சங்கம், ஜெர்மனி

ழவளநாட்டின் உச்சியில் உள்ள புகழ்மிகு யாழ்ப்பாணம் சோழியபுரமாம் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை தனது முப்பதாவது அகவை நிறைவை கொண்டாடுவதை இட்டு மிக்க மனமகிழ்ச்சி அடைவதுடன், இந்த முப்பதாவது ஆண்டு நிறைவு விழா மிக சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எமது கல்லூரியானது தனக்கென ஒரு பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டு அளப்பெரிய கல்விச்சேவையை எமது ஊரவர்க்கும் அயல் கிராமங்களுக்கும் ஆற்றி வருகிறது.

அத்தோடு கூடி வாழ்ந்த எம்மை, தனித்து வாழும் தேசங்களில் தூக்கி எறியப்பட்ட போதினிலும், பனி படர்ந்த தேசங்களில் பாஷை தெரியாத ஊர்களில் தனித்து விடப்பட்டபோதினிலும், எம்மை எல்லாம் அந்தந்த நாடுகளில் தடம் பதித்து நிமிர்ந்து நிற்க உதவியதும், எமது கல்லூரி தந்த அறிவு என்பதை மறக்கவோ மறைக்கவோ முடியாது.

இப்படிப்பட்ட கல்விச்சேவையை செய்யும் எம் கல்லூரிக்கு மேலும் வலுவூட்டி எம்மை வழி தெரியாத ஊர்களில் விழி பிதுங்கி நிற்கும் வேளை, வழி காட்டிய அந்த கல்லூரி தாய்க்கு நன்றி செலுத்துவது மட்டுமல்லாமல் உறுதுணையாக நிற்பதும் எமது தலையாய கடமையாகும். அந்தவகையில் கனடா பழைய மாணவர் சங்கம் கடந்த முப்பது வருடமாக எமது பாடசாலை முன்னேற்றத்திற்கு தோளோடு தோள் நின்று பலவிதமான உதவிகளை வழங்கி வருகின்றது என்பதை இங்கு குறிப்பிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று பல நாடுகளில் கிளை பரப்பியுள்ள எமது யாழ் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி பழைய மாணவர் சங்கம், மேலும் பல நாடுகளில் கிளை பரப்ப வேண்டும் என வேண்டிக்கொண்டு, தொடர்ந்தும் பல்லாண்டு காலம் சிறப்புடன் ஒன்றிணைந்து செயல்பட்டு, எமது பாடசாலை அன்னைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் உறுதுணையாக நிற்க உளமார வேண்டி நிற்கிறேன்.

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”

Page 52