வாழ்த்துமடல் - அப்புத்துரை கிருபானந்தமநுநீதி

அப்புத்துரை - கிருபானந்தமநுநீதி

முன்னாட் தலைவர் (2016 - 2022), தாய்ச் சங்கம், சுழிபுரம்

### வாழ்த்துமடல் - அப்புத்துரை கிருபானந்தமநுநீதி இந்து மகா சமுத்திரத்தின் முத்தென விளங்கும் ஈழத்திருநாட்டின் வட மேற்குலத்தின் கல்வி உலகில் புகழ் பூத்து விளங்கும் கல்வி அன்னையாம் சுழிபுரம் யா/விக்ரோறியா கல்லூரியானது 1876ம் ஆண்டிலிருந்து இவ்வுலகிற்கு சமநிலை ஆளுமையும், சமூகப்பொறுப்பும் கொண்ட மனித வளங்களைத் தூரநோக்குடன் வளர்த்து வழங்கி வருகிறது. எமது கல்லூரி 150வது ஆண்டு நிறைவினை அண்மிக்கும் இவ் வேளையில், 1995ம் ஆண்டிலிருந்து இற்றைவரை கல்விச் சேவையில் தூண்களாக விளங்கும் “கனடா பழைய மாணவர் சங்கம்” மிகவும் பாராட்டுக்குரியதாகும். “The Greatest Aim of Education is not knowledge, but Creating an IMPACT.” மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருத்தமான வகையில் தீர்வுகாண வழிப்படுத்தும் பாடசாலையில், தனது அளப்பரிய சேவையால் பழைய மாணவர் சங்கமானது பாடசாலைச் சமூகம் எனும் அந்தஸ்துடன் விளங்கி வருகிறது. இவ்வந்தஸ்தில் விளங்கிவரும் பல உலகளாவிய பழைய மாணவர் சங்கங்களில் இக் கனடாச் சங்கம் அமரர் க. சிவசுப்பிரமணியம் அவர்களது வழிகாட்டலில் (போஷகர்). அமரர் R.பாலசுப்பிரமணியம் அவர்களது தலைமையில் ஆரம்பமானதில் போஷகர் அவர்கள் எனது தாய்மாமன் என்பதும், இச் சந்தர்ப்பமானது எனது கல்விச் சேவைக்கு வலுவூட்டுகிறது. மேலும் எமது விக்ரோறியா அன்னைக்குத் தூண்களாக விளங்கும் எனது சகோதரர்கள் ஒன்றிணைந்து சேவையாற்றும் கனடா பழைய மாணவர் சங்கத்தினரை மேலும் வலுப் பெற்று, சிறப்புடன் சேவையாற்ற எல்லாம் வல்ல இயற்கை அன்னையின் துணையுடன் வாழ்த்துவதில் பெருமிதமடைகிறேன்.

வாழ்த்துமடல் - அப்புத்துரை கிருபானந்தமநுநீதி

வாழ்த்துமடல் - அப்புத்துரை கிருபானந்தமநுநீதி

அப்புத்துரை - கிருபானந்தமநுநீதி

முன்னாட் தலைவர் (2016 - 2022), தாய்ச் சங்கம், சுழிபுரம்

ந்து மகா சமுத்திரத்தின் முத்தென விளங்கும் ஈழத்திருநாட்டின் வட மேற்குலத்தின் கல்வி உலகில் புகழ் பூத்து விளங்கும் கல்வி அன்னையாம் சுழிபுரம் யா/விக்ரோறியா கல்லூரியானது 1876ம் ஆண்டிலிருந்து இவ்வுலகிற்கு சமநிலை ஆளுமையும், சமூகப்பொறுப்பும் கொண்ட மனித வளங்களைத் தூரநோக்குடன் வளர்த்து வழங்கி வருகிறது.

எமது கல்லூரி 150வது ஆண்டு நிறைவினை அண்மிக்கும் இவ் வேளையில், 1995ம் ஆண்டிலிருந்து இற்றைவரை கல்விச் சேவையில் தூண்களாக விளங்கும் “கனடா பழைய மாணவர் சங்கம்” மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

“The Greatest Aim of Education is not knowledge, but Creating an IMPACT.”

மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருத்தமான வகையில் தீர்வுகாண வழிப்படுத்தும் பாடசாலையில், தனது அளப்பரிய சேவையால் பழைய மாணவர் சங்கமானது பாடசாலைச் சமூகம் எனும் அந்தஸ்துடன் விளங்கி வருகிறது.

இவ்வந்தஸ்தில் விளங்கிவரும் பல உலகளாவிய பழைய மாணவர் சங்கங்களில் இக் கனடாச் சங்கம் அமரர் க. சிவசுப்பிரமணியம் அவர்களது வழிகாட்டலில் (போஷகர்). அமரர் R.பாலசுப்பிரமணியம் அவர்களது தலைமையில் ஆரம்பமானதில் போஷகர் அவர்கள் எனது தாய்மாமன் என்பதும், இச் சந்தர்ப்பமானது எனது கல்விச் சேவைக்கு வலுவூட்டுகிறது.

மேலும் எமது விக்ரோறியா அன்னைக்குத் தூண்களாக விளங்கும் எனது சகோதரர்கள் ஒன்றிணைந்து சேவையாற்றும் கனடா பழைய மாணவர் சங்கத்தினரை மேலும் வலுப் பெற்று, சிறப்புடன் சேவையாற்ற எல்லாம் வல்ல இயற்கை அன்னையின் துணையுடன் வாழ்த்துவதில் பெருமிதமடைகிறேன்.

Page 44