வாழ்த்துரை - திருமதி. நாச்சியார் செல்வநாயகம்

திருமதி. நாச்சியார் செல்வநாயகம்

ஓய்வு நிலை முதுநிலை விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்

### வாழ்த்துரை - திருமதி. நாச்சியார் செல்வநாயகம் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்க 30வது ஆண்டு நிறைவு விழா மலருக்கான வாழ்த்துரை. விக்ரோறியாக் கல்லூரி எனும் நாமம் கொண்ட நாம் கற்றுக் கடைத்தேறிய அன்னையை முதலில் வணங்குகின்றேன். மானிடப் பண்பாட்டு நலம் கொண்ட ஆசிரியர்களை விக்ரோறியா அன்னை தன்னிடத்திலே கொண்டிருந்தமையால் நாமும் மனிதர்களாக வளர்ச்சிபெற வாய்ப்புக் கிடைத்து. நான் கற்ற ஆசிரியர்களில் பலர் தங்கள் பிள்ளைகள் போன்று எம்மை அரவணைத்து அறிவூட்டினார்கள். வாழக் கற்றுக் கொடுத்த அந்த ஆசிரியர்களையும் நன்றியுடன் வணங்குகின்றேன். நான் முதலில் எனது வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சுழிபுரம் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றேன். ஆறாவது வகுப்பில் விக்ரோறியா அன்னையிடம் சேர்ந்தேன். கல்லூரியில் ஆசிரியர்களின் அரவணைப்பில் எந்தவித கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் கற்பனவற்றைக் கற்றேன். விளையாட்டுகளிலும் பங்குபற்றி மகிழ்வெய்தினேன். விக்ரோறியா அன்னையிடமிருந்து பல்கலைக்கழகம் சென்ற முதல் பெண்மணி என்ற பெயரையும் தட்டிக் கொண்டேன். வாழ்வில் மனிதன் நன்றியுள்ளவராக வாழும் போதே மன நிம்மதி அடைய முடியும். அவ்வகையில் பெற்றோருக்கும் தான் பிறந்த ஊருக்கும் பாடசாலைக்கும் நன்றி உணர்வோடு சேவை செய்வதே உண்மையான வழிபாடாகும். அவ்வகையில் தாம் கற்ற கல்லூரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் கனடா நாட்டில் ஒரு பழைய மாணவர் சங்கத்தை அமைத்து தொண்டு புரியும் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன். சங்கத்தின் மூலம் ஒற்றுமையுணர்வும் சேவை மனப்பான்மையும் மேலும் மேலும் வளர்ச்சி பெற விக்ரோறியா அன்னையின் பூமியில் இருந்து அருளாட்சி செய்யும் நடராஜப் பெருமானை வேண்டிக் கொள்கின்றேன். விக்ரோறியா அன்னையின் செல்வங்கள் ஆகிய பழைய மாணவர்களாகிய நாங்கள் எல்லோரும் எங்கள் உள்ளத்தில் அன்பைப் பெருக்கி உலக சமாதானத்திற்காகவும் பாடுபடுவோம். நற்பண்பே நல்ல மனிதரை உருவாக்குகின்றது. "Manners Makyth the Man".

வாழ்த்துரை - திருமதி. நாச்சியார் செல்வநாயகம்

வாழ்த்துரை - திருமதி. நாச்சியார் செல்வநாயகம்

திருமதி. நாச்சியார் செல்வநாயகம்

ஓய்வு நிலை முதுநிலை விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்க 30வது ஆண்டு நிறைவு விழா மலருக்கான வாழ்த்துரை.

விக்ரோறியாக் கல்லூரி எனும் நாமம் கொண்ட நாம் கற்றுக் கடைத்தேறிய அன்னையை முதலில் வணங்குகின்றேன். மானிடப் பண்பாட்டு நலம் கொண்ட ஆசிரியர்களை விக்ரோறியா அன்னை தன்னிடத்திலே கொண்டிருந்தமையால் நாமும் மனிதர்களாக வளர்ச்சிபெற வாய்ப்புக் கிடைத்து. நான் கற்ற ஆசிரியர்களில் பலர் தங்கள் பிள்ளைகள் போன்று எம்மை அரவணைத்து அறிவூட்டினார்கள். வாழக் கற்றுக் கொடுத்த அந்த ஆசிரியர்களையும் நன்றியுடன் வணங்குகின்றேன். நான் முதலில் எனது வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சுழிபுரம் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றேன். ஆறாவது வகுப்பில் விக்ரோறியா அன்னையிடம் சேர்ந்தேன். கல்லூரியில் ஆசிரியர்களின் அரவணைப்பில் எந்தவித கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் கற்பனவற்றைக் கற்றேன். விளையாட்டுகளிலும் பங்குபற்றி மகிழ்வெய்தினேன். விக்ரோறியா அன்னையிடமிருந்து பல்கலைக்கழகம் சென்ற முதல் பெண்மணி என்ற பெயரையும் தட்டிக் கொண்டேன்.

வாழ்வில் மனிதன் நன்றியுள்ளவராக வாழும் போதே மன நிம்மதி அடைய முடியும். அவ்வகையில் பெற்றோருக்கும் தான் பிறந்த ஊருக்கும் பாடசாலைக்கும் நன்றி உணர்வோடு சேவை செய்வதே உண்மையான வழிபாடாகும். அவ்வகையில் தாம் கற்ற கல்லூரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் கனடா நாட்டில் ஒரு பழைய மாணவர் சங்கத்தை அமைத்து தொண்டு புரியும் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன். சங்கத்தின் மூலம் ஒற்றுமையுணர்வும் சேவை மனப்பான்மையும் மேலும் மேலும் வளர்ச்சி பெற விக்ரோறியா அன்னையின் பூமியில் இருந்து அருளாட்சி செய்யும் நடராஜப் பெருமானை வேண்டிக் கொள்கின்றேன். விக்ரோறியா அன்னையின் செல்வங்கள் ஆகிய பழைய மாணவர்களாகிய நாங்கள் எல்லோரும் எங்கள் உள்ளத்தில் அன்பைப் பெருக்கி உலக சமாதானத்திற்காகவும் பாடுபடுவோம். நற்பண்பே நல்ல மனிதரை உருவாக்குகின்றது. "Manners Makyth the Man".

Page 42