அன்புள்ள முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும், நலன் விரும்பிகள்,
இந்த 30 ஆம் ஆண்டு விழா நிகழ்வில் உங்களுடன் இணைந்து கொண்டாடுவதில் பெருமையடைகிறேன். கடந்த மூன்று தசாப்தங்களாக, எங்கள் முன்னாள் மாணவர்கள் சங்கம் நமது கல்வி நிறுவனத்திற்கும் சமூகத்திற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது.
என்னுடைய பதவிக்காலத்தில், சங்கத்தின் முதன்மையான சமூகப் பணிகளில் ஒன்று, IMHO என்ற தொண்டு நிறுவனத்திற்கு சங்கத்தின் முதல் நன்கொடையாக $1,250 வழங்கிய தருணம். இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. மேலும், சிவபாதசுந்தரனார் மண்டப திருத்த வேலைகளுக்காக $5,000 நன்கொடை அனுப்பிய நிகழ்வும் சங்கத்தின் முக்கிய சாதனையாக இருந்தது.
அத்துடன், நிதி திரட்டும் நோக்கில், உலகப்புகழ் பெற்ற வீணை வாத்தியக் கலைஞர் ராஜேஷ் வைத்யா அவர்களின் வீணை இசை நிகழ்ச்சியை Ontario Science Centre - Auditorium அரங்கில் நடத்தினோம். இந்த நிகழ்வு சங்கத்திற்கும் சமூகத்திற்கும் பெரும் ஆதரவு பெற்ற மறக்க முடியாத முயற்சியாக அமைந்தது.
இந்தச் சிறப்பான தருணத்தில், சங்கத்தின் வளர்ச்சிக்காக உழைத்த அனைவருக்கும், முன்னாள் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். எதிர்காலத்திலும் நம் சங்கம் மேலும் உயரங்களை தொட, அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.
வாழ்த்துகளுடன்.