யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம், கனடா பழைய மாணவர் சங்கத்தின் 30ம் ஆண்டு, நிறைவு விழா மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இச் சங்கமானது எம்மை விட்டுப் பிரிந்த திரு. K. சிவசுப்ரமணியம் (முன்னாள் கட்டுப்பத்தை விரிவுரையாளர்) அவர்களின் வழிகாட்டலில் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
நாம் இங்குள்ள பழைய மாணவர்கள் பங்களிப்பதற்கு ஏற்றவாறு அவர்களை ஊக்குவிக்குமுகமாக ஒன்று கூடல்கள், சுற்றுலா மற்றும் பிள்ளைகள் பங்குபற்றக் கூடிய போட்டி நிகழ்ச்சிகள், ஆசிரியர் கௌரவிப்புகள், பொங்கல் விழாக்கள் போன்றவற்றை நடாத்தியிருக்கிறோம். இந்நிகழ்வுகள் எமது கல்லூரி அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்ற ஏதுவாக அமைந்தது.
இப் பணிக்கு உழைத்த மறைந்த திரு.R.பாலசுப்ரமணியம், திரு.S.சிவராம், திரு.T.சண்முகநாதன் (முன்னாள் தலைவர்கள்) திரு.Kசிவஅருள்ராஜ (முன்னாள் செயலாளர்) ஆகியோரையும் நாம் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். இவர்களைத் தொடர்ந்து திரு.V.பாலச்சந்திரன், திருமதி.க.விஜயதேவி, திரு.R.முரளிதரன் ஆகியோரின் தலைமைத்துவத்துடன் இணைந்து உழைத்த நிர்வாக உறுப்பினர்களின் சேவை அளப்பரியது.
இனிவரும் காலங்களில் இச்சங்கம் மேலும் வலுப்படுத்தப்பட்டு, ஏனைய நாட்டுச் சங்கத்தினருடன் இணைந்து கூட்டாக இயங்கவேண்டும் என்று விரும்புகிறேன். தாயகத்திலுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தைக் கண்டறிந்து, அரசாங்கத் திட்டங்களில் கண்டறியப்படாத பணிகளை, நாம் தொடரவேண்டும் என்பதே என் ஆவல் ஆகும்.