முன்னாள் தலைவர் நினைவிலிருந்து சில சிந்தனைகள்

வி. பாலச்சந்திரன்

முன்னாள் தலைவர், யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் - கனடா

### முன்னாள் தலைவர் நினைவிலிருந்து சில சிந்தனைகள் இலங்கையில் இருந்து போர்க்கள சூழ்நிலையினால் இடம் பெயர்ந்த மக்களாகிய நாம், பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்தோம். நாட்டுப்பற்று காரணமாக நாம், கனடாவில் 1995ஆம் ஆண்டு முதன்முதல் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பணக் கூட்டம் செய்தோம். திரு. க. சிவசுப்பிரமணியம் அவர்கள் மேற்பார்வையில், புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்தோம். புதிய தலைவராக தெரிவு செய்த திரு. சு. பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் உள்ள நிர்வாகம் சில வருடம் திறம்பட செயல்பட்டது. இக்காலப் பகுதியில் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உதவியுடன் முதன்முதலில் $4996 பணம் கல்லூரி பழைய மாணவர் சங்க வங்கிக் கணக்கில் வைப்பில் இடப்பட்டது. இதன் வருமானத்தில் பாடசாலை உதவி ஆசிரியர்களின் வேதனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினோம். இதன்பின் திரு. சிவராம் அவர்கள் தலைமை பொறுப்பேற்று செயற்பட்டு வந்தார். இக்காலக்கட்டத்தில் கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்கி 400m வரை ஓடு பாதை அமைக்கும் முயற்சியில், ஒரு தொகுதி நிலத்தை கொள்வனவு செய்து கொடுக்கப்பட்டது. கல்லூரியின் 125ஆம் நிறைவையொட்டி நாம் ஒரு நினைவு மலரை இங்கு வெளியீடு செய்து விமர்சையாக கொண்டாடினோம். இதன்பின் காலத்துக்குக் காலம் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இக்காலக்கட்டத்தில் 400m ஓடுபாதையை முழுமையாக பூர்த்தி செய்து பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் புதிய நிர்வாக சபை தெரிவு செய்து பல வேலைத் திட்டங்களை செய்துள்ளோம். அங்கத்தவர்களை மேலும் உள்வாங்கும் நோக்கவுடன் உல்லாச பிரயாணங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள், தமிழ் திரைப்படங்கள், பொங்கல் விழாக்கள், கௌரவிப்பு விழாக்கள் என்பன நடாத்தி நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இதனால் பல நிதிகளைப் பெற்று கல்லூரி நிர்வாகத்தின் தேவைகள் அறிந்து நிவர்த்தி செய்துள்ளோம். அத்துடன் பல நிர்வாக உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் கல்லூரி மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் புலமை பரிசில்கள் வழங்கி சிறப்பித்தார்கள். இதன் விபரங்கள் மற்ற அறிக்கைகளில் வெளிவந்துள்ளது. இன்று நாம் 30ஆவது வருட நிறைவு விழாவை கொண்டாடி பெருமையுடன் மகிழ்ச்சி அடைகின்றோம். இவ்வளவு காலமும் நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள், ஆதரவுகள், நிதி உதவிகள் காரணமாக இன்று எமது பாடசாலை வட மாகாணத்தில் அதிஉயர் பாடசாலையாக திகழ்கின்றது. இதுபோல் இனி வரும் புதிய நிர்வாகங்களுக்கு நீங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கி உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

முன்னாள் தலைவர் நினைவிலிருந்து சில சிந்தனைகள்

முன்னாள் தலைவர் நினைவிலிருந்து சில சிந்தனைகள்

வி. பாலச்சந்திரன்

முன்னாள் தலைவர், யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் - கனடா

லங்கையில் இருந்து போர்க்கள சூழ்நிலையினால் இடம் பெயர்ந்த மக்களாகிய நாம், பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்தோம். நாட்டுப்பற்று காரணமாக நாம், கனடாவில் 1995ஆம் ஆண்டு முதன்முதல் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பணக் கூட்டம் செய்தோம்.

திரு. க. சிவசுப்பிரமணியம் அவர்கள் மேற்பார்வையில், புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்தோம். புதிய தலைவராக தெரிவு செய்த திரு. சு. பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் உள்ள நிர்வாகம் சில வருடம் திறம்பட செயல்பட்டது.

இக்காலப் பகுதியில் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உதவியுடன் முதன்முதலில் $4996 பணம் கல்லூரி பழைய மாணவர் சங்க வங்கிக் கணக்கில் வைப்பில் இடப்பட்டது. இதன் வருமானத்தில் பாடசாலை உதவி ஆசிரியர்களின் வேதனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினோம். இதன்பின் திரு. சிவராம் அவர்கள் தலைமை பொறுப்பேற்று செயற்பட்டு வந்தார். இக்காலக்கட்டத்தில் கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்கி 400m வரை ஓடு பாதை அமைக்கும் முயற்சியில், ஒரு தொகுதி நிலத்தை கொள்வனவு செய்து கொடுக்கப்பட்டது. கல்லூரியின் 125ஆம் நிறைவையொட்டி நாம் ஒரு நினைவு மலரை இங்கு வெளியீடு செய்து விமர்சையாக கொண்டாடினோம்.

இதன்பின் காலத்துக்குக் காலம் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இக்காலக்கட்டத்தில் 400m ஓடுபாதையை முழுமையாக பூர்த்தி செய்து பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் புதிய நிர்வாக சபை தெரிவு செய்து பல வேலைத் திட்டங்களை செய்துள்ளோம்.

அங்கத்தவர்களை மேலும் உள்வாங்கும் நோக்கவுடன் உல்லாச பிரயாணங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள், தமிழ் திரைப்படங்கள், பொங்கல் விழாக்கள், கௌரவிப்பு விழாக்கள் என்பன நடாத்தி நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இதனால் பல நிதிகளைப் பெற்று கல்லூரி நிர்வாகத்தின் தேவைகள் அறிந்து நிவர்த்தி செய்துள்ளோம். அத்துடன் பல நிர்வாக உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் கல்லூரி மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் புலமை பரிசில்கள் வழங்கி சிறப்பித்தார்கள். இதன் விபரங்கள் மற்ற அறிக்கைகளில் வெளிவந்துள்ளது. இன்று நாம் 30ஆவது வருட நிறைவு விழாவை கொண்டாடி பெருமையுடன் மகிழ்ச்சி அடைகின்றோம். இவ்வளவு காலமும் நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள், ஆதரவுகள், நிதி உதவிகள் காரணமாக இன்று எமது பாடசாலை வட மாகாணத்தில் அதிஉயர் பாடசாலையாக திகழ்கின்றது. இதுபோல் இனி வரும் புதிய நிர்வாகங்களுக்கு நீங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கி உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Page 30