வாழ்த்துச் செய்தி - முன்னாள் அதிபர் (திருமதி சத்திய குமாரி சிவகுமார்)

திருமதி சத்திய குமாரி சிவகுமார்

ஓய்வு நிலை அதிபர், விக்ரோறியா கல்லூரி

### வாழ்த்துச் செய்தி - முன்னாள் அதிபர் (திருமதி சத்திய குமாரி சிவகுமார்) எமது கல்லூரியில் வீற்றிருக்கும் நடராஜர் பெருமானின் பாதாரவிந்தங்கள் பணிந்து கனடா பழைய மாணவர் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு விழாவிற்கு செய்தி வழங்குவதில் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் திருமதி சத்திய குமாரி சிவகுமார் என்ற வகையில் பெருமையும் புகழும் அடைகின்றேன். கனடா பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகளை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். பல சவாலான சூழலில் எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு பல வழிகளில் இன்று வரை பழைய மாணவர்கள் உதவும் கரங்களாக செயற்படுகின்றனர். பௌதீக வள அபிவிருத்திக்கு பாரிய நிதி வளங்களை நாம் கேட்கும் போது கல்லூரியின் வளர்ச்சிக்கு உடனுக்குடன் அனுப்பி வளர்ச்சி மேம்பாட்டிற்கு உதவிய பாரிய சங்கமாக கனடா கிளை இயங்குகிறது. காணி கொள்வனவுகள், திறந்தவெளி அரங்கம், கட்டிட அபிவிருத்தி என பல வழிகளில் கல்லூரியை வளர்ப்பதற்கு இன்று வரை கனடா பழைய மாணவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். 30 வருடங்களாக கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவும் கரங்களாக செயற்படும் கனடா கிளையை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்த்துச் செய்தி - முன்னாள் அதிபர் (திருமதி சத்திய குமாரி சிவகுமார்)

வாழ்த்துச் செய்தி - முன்னாள் அதிபர் (திருமதி சத்திய குமாரி சிவகுமார்)

திருமதி சத்திய குமாரி சிவகுமார்

ஓய்வு நிலை அதிபர், விக்ரோறியா கல்லூரி

மது கல்லூரியில் வீற்றிருக்கும் நடராஜர் பெருமானின் பாதாரவிந்தங்கள் பணிந்து கனடா பழைய மாணவர் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு விழாவிற்கு செய்தி வழங்குவதில் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் திருமதி சத்திய குமாரி சிவகுமார் என்ற வகையில் பெருமையும் புகழும் அடைகின்றேன்.

கனடா பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகளை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.

பல சவாலான சூழலில் எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு பல வழிகளில் இன்று வரை பழைய மாணவர்கள் உதவும் கரங்களாக செயற்படுகின்றனர். பௌதீக வள அபிவிருத்திக்கு பாரிய நிதி வளங்களை நாம் கேட்கும் போது கல்லூரியின் வளர்ச்சிக்கு உடனுக்குடன் அனுப்பி வளர்ச்சி மேம்பாட்டிற்கு உதவிய பாரிய சங்கமாக கனடா கிளை இயங்குகிறது.

காணி கொள்வனவுகள், திறந்தவெளி அரங்கம், கட்டிட அபிவிருத்தி என பல வழிகளில் கல்லூரியை வளர்ப்பதற்கு இன்று வரை கனடா பழைய மாணவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

30 வருடங்களாக கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவும் கரங்களாக செயற்படும் கனடா கிளையை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Page 28