வாழ்த்துச் செய்தி - முன்னாள் அதிபர் (திருமதி அ. வேலுப்பிள்ளை)

திருமதி அ. வேலுப்பிள்ளை

முன்னாள் அதிபர், யா/விக்ரோறியாக் கல்லூரி – சுழிபுரம்

### வாழ்த்துச் செய்தி - முன்னாள் அதிபர் (திருமதி அ. வேலுப்பிள்ளை) யா/விக்ரோறியாக் கல்லூரியின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிறைவினை கொண்டாடுவதற்கு கல்லூரிச் சமூகம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் கனடா பழைய மாணவர் சங்கமானது தமது 30வது ஆண்டு நிறைவு மலரினை வெளியிடுவதை அறிந்து மகிழ்வடைகின்றேன். இது ஓர் வரலாற்று ஆவணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. இம் மலருக்கு வாழ்த்துச்செய்தி வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய மலர்க்குழுவினருக்கு நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கனடா பழைய மாணவர் சங்கத்தின் உருவாக்கத்திற்கும், செயற்பாடுகளுக்கும் முன்னாள் அதிபரும், கொழும்பு பழைய மாணவர் சங்கத் தலைவருமான அமரர் K. அருணாசலம் அவர்களும், தொடர்ந்து முன்னாள் உப அதிபர் அமரர் S.K.இந்திரராசா அவர்களும் பெரும்பங்கு வகித்தனர் என்றால் மிகையாகாது. எனது சேவைக்காலத்தில் அரசாங்கத்தின் புதிய கல்வித்திட்டம் புகுத்தப்பட்டமையால் அதற்கமைவான ஆசிரியவளம், நவீன வசதிகள் கொண்ட பௌதீக வளங்கள் என்பன தேவைப்பட்டன. இத் தேவைகளை நிறைவு செய்வதற்கு நாட்டின் சூழ்நிலை காரணமாக அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியவில்லை. தமது கல்லூரித் தாயின் தேவைகளை குறிப்பறிந்து தொடர்ந்து நிறைவேற்றி வரும் கனடா பழைய மாணவர் சங்கத்தினருக்கு நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதோடு இவ் மலரின் வெளிவருகைக்காக உழைத்த அத்தனை உள்ளங்களையும் பாராட்டி வாழ்த்தி விடை பெறுகின்றேன்.

வாழ்த்துச் செய்தி - முன்னாள் அதிபர் (திருமதி அ. வேலுப்பிள்ளை)

வாழ்த்துச் செய்தி - முன்னாள் அதிபர் (திருமதி அ. வேலுப்பிள்ளை)

திருமதி அ. வேலுப்பிள்ளை

முன்னாள் அதிபர், யா/விக்ரோறியாக் கல்லூரி – சுழிபுரம்

யா/விக்ரோறியாக் கல்லூரியின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிறைவினை கொண்டாடுவதற்கு கல்லூரிச் சமூகம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் கனடா பழைய மாணவர் சங்கமானது தமது 30வது ஆண்டு நிறைவு மலரினை வெளியிடுவதை அறிந்து மகிழ்வடைகின்றேன். இது ஓர் வரலாற்று ஆவணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

இம் மலருக்கு வாழ்த்துச்செய்தி வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய மலர்க்குழுவினருக்கு நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கனடா பழைய மாணவர் சங்கத்தின் உருவாக்கத்திற்கும், செயற்பாடுகளுக்கும் முன்னாள் அதிபரும், கொழும்பு பழைய மாணவர் சங்கத் தலைவருமான அமரர் K. அருணாசலம் அவர்களும், தொடர்ந்து முன்னாள் உப அதிபர் அமரர் S.K.இந்திரராசா அவர்களும் பெரும்பங்கு வகித்தனர் என்றால் மிகையாகாது.

எனது சேவைக்காலத்தில் அரசாங்கத்தின் புதிய கல்வித்திட்டம் புகுத்தப்பட்டமையால் அதற்கமைவான ஆசிரியவளம், நவீன வசதிகள் கொண்ட பௌதீக வளங்கள் என்பன தேவைப்பட்டன. இத் தேவைகளை நிறைவு செய்வதற்கு நாட்டின் சூழ்நிலை காரணமாக அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியவில்லை.

தமது கல்லூரித் தாயின் தேவைகளை குறிப்பறிந்து தொடர்ந்து நிறைவேற்றி வரும் கனடா பழைய மாணவர் சங்கத்தினருக்கு நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதோடு இவ் மலரின் வெளிவருகைக்காக உழைத்த அத்தனை உள்ளங்களையும் பாராட்டி வாழ்த்தி விடை பெறுகின்றேன்.

Page 24