திரு.கா.சந்திரபாலன்
முன்னாள் அதிபர், யா/விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்; கம்பனை வீதி, சுழிபுரம். 10.03.2025.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் ஒரு சைவ ஆங்கில பாடசாலை ஒன்றின் தேவை பலராலும் உணரப்பட்டிருந்தது. எமது பிரதேசத்தில் இத்தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, அமரர் செல்லப்பா, அமரர் முதலியார் கனகரட்ணம் ஆகியோரின் பெருமுயற்சியால் 1876 இல் நிறுவப்பட்டது. எமது பிரதேசத்தில் இன்றுவரை கல்வி ஒளி பரப்பி நிற்கும் இவ் வித்தியாலயத்தின் ஸ்தாபகர்களை இச்சந்தர்ப்த்தில் நினைவு கூர்வது மிகப் பொருத்தமானதாகும்.
கனடா வாழ் பழைய மாணவர்களின் அர்ப்பணிப்பான பங்களிப்பினால் கனடா பழைய மாணவர் சங்கம் உயிர்த் துடிப்புடன் செயற்படுவதையிட்டு மகிழ்வடைகின்றேன். ஆரம்ப காலம் முதல் இற்றைவரை எமது கல்லூரியின் பல்துறை வளர்ச்சிக்காகவும் நீங்கள் அரும்பணியாற்றுவதை யாவரும் அறிவர். உங்களுடைய இன்னோரன்ன உதவிகள் எமது கல்லூரி மாணவர்களின் பல்வேறு தேவைகளை நிறைவுசெய்து வருவதை மனப்பூர்வமாக பாராட்டுகின்றேன். எமது கல்லூரி மாதா சகல வெற்றிகளையும் பெற்று பெரும் புகழுடன் திகழ வேண்டும் என்பது பழைய மாணவர்களாகிய எமது அவாவாகும். இத்தருணம் தங்களின் பெரு முயற்சியின் ஓர் படிக்கல்லாக வெளியிடும் முப்பதாவது ஆண்டைக் குறித்து வெளியிடும் சிறப்பு மலருக்கு இச்செய்தியினை வழங்குவதில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைகின்றேன். தங்களின் பல்வேறு சேவைகளுக்கும், இக்கல்லூரியின் வளர்ச்சியில் தாங்கள் கொண்ட மேலான அக்கறைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் உரியனவாகும்.