வாழ்த்துச் செய்தி - அதிபர்

திருமதி. க. சுலபாமதி

அதிபர், யா/விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்

### வாழ்த்துச் செய்தி - அதிபர் எமது கல்லூரியின் கனடா வாழ் பழைய மாணவர்களால் 1995 ஆம் ஆண்டில் பல்வேறு அர்ப்பணிப்புக்களுடன் உருவாக்கப்பட்ட கனடா பழைய மாணவர் சங்கம் தனது 30 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். எமது கல்லூரி நினைவுகளைப் பசுமையுடன் தாங்கிக் கனடாவில் வாழ்வைத் தொடரும் எமது கல்லூரி மாணவர்கள் தங்களை வளர்த்தெடுத்த கல்லூரி அன்னைக்காகப் பழைய மாணவர் சங்கம் ஒன்றைத் தாபித்து அதன் மூலம் கல்லூரித் தாயின் பல்வேறு தேவைகளைத் தாமாக நிறைவேற்றி வருகின்றனர். பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தி, கற்பித்தல் செயற்பாடுகளுக்கான அனுசரணை, கற்றல் செயற்பாடுகளுக்கான அனுசரணை போன்ற பல்வேறு வழிகளில் கல்லூரிக்கு ஆற்றும் பணி பெருமதிப்புள்ளது. 150ஆவது ஆண்டை நோக்கி மகிழ்வுடன் பயணிக்கும் எமது கல்லூரித் தாய் ஆற்றலும் ஆளுமையும் பண்பும் மிக்க ஆயிரமாயிரம் மாணவர்களைப் பிரசவிக்க என்றென்றும் துணையாய் இருந்து இன்னும் பல்லாண்டு சிறப்புற நல்வாழ்த்துக்கள். ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி என்றென்றும் கல்லூரித் தாய்க்குச் சேவை செய்திடும் கனடாப் பழைய மாணவர் சங்கத்திற்கு எமது கல்லூரிச் சமூகம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

வாழ்த்துச் செய்தி - அதிபர்

வாழ்த்துச் செய்தி - அதிபர்

திருமதி. க. சுலபாமதி

அதிபர், யா/விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்

மது கல்லூரியின் கனடா வாழ் பழைய மாணவர்களால் 1995 ஆம் ஆண்டில் பல்வேறு அர்ப்பணிப்புக்களுடன் உருவாக்கப்பட்ட கனடா பழைய மாணவர் சங்கம் தனது 30 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.

எமது கல்லூரி நினைவுகளைப் பசுமையுடன் தாங்கிக் கனடாவில் வாழ்வைத் தொடரும் எமது கல்லூரி மாணவர்கள் தங்களை வளர்த்தெடுத்த கல்லூரி அன்னைக்காகப் பழைய மாணவர் சங்கம் ஒன்றைத் தாபித்து அதன் மூலம் கல்லூரித் தாயின் பல்வேறு தேவைகளைத் தாமாக நிறைவேற்றி வருகின்றனர்.

பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தி, கற்பித்தல் செயற்பாடுகளுக்கான அனுசரணை, கற்றல் செயற்பாடுகளுக்கான அனுசரணை போன்ற பல்வேறு வழிகளில் கல்லூரிக்கு ஆற்றும் பணி பெருமதிப்புள்ளது. 150ஆவது ஆண்டை நோக்கி மகிழ்வுடன் பயணிக்கும் எமது கல்லூரித் தாய் ஆற்றலும் ஆளுமையும் பண்பும் மிக்க ஆயிரமாயிரம் மாணவர்களைப் பிரசவிக்க என்றென்றும் துணையாய் இருந்து இன்னும் பல்லாண்டு சிறப்புற நல்வாழ்த்துக்கள்.

ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி என்றென்றும் கல்லூரித் தாய்க்குச் சேவை செய்திடும் கனடாப் பழைய மாணவர் சங்கத்திற்கு எமது கல்லூரிச் சமூகம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

Page 20