செயலாளரின் செய்தி

ததீஸ்வரன் சிவசுப்பிரமணியம்

செயலாளர், யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் - கனடா

### செயலாளரின் செய்தி யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் – கனடா, தனது 30 ஆண்டை கொண்டாடும் இவ்வேளையில், செயலாளராக கடமை புரிய சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். சங்கத்தின் முன்னோடிகளினால், கல்லூரி மீதான பற்றினால், 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எங்கள் சங்கம், பல செயற்குழுக்களைக் கடந்து, பழைய மாணவர்களினதும், பழைய மாணவர்களின் குடும்பத்தவர்களினதும், முன்னாள் ஆசிரியர்களினதும், நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்புடனும் நன்கொடைகளாலும், பல்வேறுபட்ட நற்பணிகளை எமது கல்லூரிக்கும், சமூகத்திற்கும் தொடர்ந்து செய்து வருகின்றது. மேலும் இச்சங்கம் மிக முக்கியமாக, கனடாவில் வசிக்கும் விக்ரோறியா அன்னையின் பிள்ளைகளை ஒன்றிணைக்கும் ஒரு உறவுப் பாலமாகவும் தன் பணியை தொடர்கிறது. இந்த பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், முன்னாள் போசகர்களினதும் தலைவர்களினதும் உறுப்பினர்களினதும் தன்னலமற்ற தொண்டும், ஒற்றுமையும், அர்ப்பணிப்பும், சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வலுவூட்டியிருக்கின்றன. அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இன்றைய செயற்குழுவும் உறுதியாக செயல்பட்டு வருகின்றது. சங்கத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு மலர் வெளியீட்டின் பின், கடந்த 18 ஆண்டுகளுக்கான நமது பயணத்தின் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை இச்செயற்குழு உணர்ந்ததின் வெளிப்பாடே இந்த 30 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர். இந்த மலர், எமது கடந்த கால (1995 தொடக்கம் 2025 வரையான) நினைவுகளையும், சேவைகளையும், சாதனைகளையும் பதிவு செய்யும் ஒரு வரலாற்றுச் சான்றாக இருக்கும் என திடமாக நம்புகிறேன். இந்த மலருக்காக தகவல், புகைப்படங்கள், ஆதாரங்கள், ஆலோசனைகள் வழங்கிய அனைத்து முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களுக்கும், மேலும் மலருக்கு வாழ்த்துச் செய்தி மற்றும் ஆக்கங்கள் தந்துதவியவர்களுக்கும், மலர் உருவாக்கத்திற்கு உதவிய தட்டச்சு செய்தவர்களுக்கும், வடிவமைப்பாளர்களுக்கும், மெய்ப்பு நோக்குதல் புரிந்தவர்களுக்கும், முக்கியமாக மலர் வெளியிடுவதற்கு உதவிய விளம்பரதாரர்களுக்கும், அத்துடன், 30 ஆவது ஆண்டு நிறைவு ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமை்ப்பு செய்த உதவிச் செயலாளர் திரு. முரளிதரன் கதிர்காமநாதன் அவர்களுக்கும், செயற்குழு உறுப்பினர்களின் உதவியினூடாகக் கிடைக்கப்பெற்ற விளம்பரதாரர்களின் தகவல்களை ஒருங்கிணைத்து நிர்வகித்த உதவிப் பொருளாளர் திரு. சுதர்சன் முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கும், ஒன்றுகூடல் நுழைவுச்சீட்டுகளை செயற்குழு உறுப்பினர்களின் உதவியுடன் பழைய மாணவர்களின் கைகளில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்த பொருளாளர் சிவா ஞானப்பிரகாசம் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சிறப்பான தருணத்தில், 2026 ஆம் ஆண்டு, எமது கல்லூரி 150 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்க இருப்பதை பெருமையுடன் நினைவூட்டி எமது எதிர்கால செயற்குழுக்களுக்கும் உங்களது ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு பழைய மாணவர்களையும், பழைய மாணவர்களின் குடும்பத்தினர்களையும், நலன் விரும்பிகளையும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன். நன்றியுடன், ததீஸ்வரன் சிவசுப்பிரமணியம்

செயலாளரின் செய்தி

செயலாளரின் செய்தி

ததீஸ்வரன் சிவசுப்பிரமணியம்

செயலாளர், யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் - கனடா

யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் – கனடா, தனது 30 ஆண்டை கொண்டாடும் இவ்வேளையில், செயலாளராக கடமை புரிய சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

சங்கத்தின் முன்னோடிகளினால், கல்லூரி மீதான பற்றினால், 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எங்கள் சங்கம், பல செயற்குழுக்களைக் கடந்து, பழைய மாணவர்களினதும், பழைய மாணவர்களின் குடும்பத்தவர்களினதும், முன்னாள் ஆசிரியர்களினதும், நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்புடனும் நன்கொடைகளாலும், பல்வேறுபட்ட நற்பணிகளை எமது கல்லூரிக்கும், சமூகத்திற்கும் தொடர்ந்து செய்து வருகின்றது. மேலும் இச்சங்கம் மிக முக்கியமாக, கனடாவில் வசிக்கும் விக்ரோறியா அன்னையின் பிள்ளைகளை ஒன்றிணைக்கும் ஒரு உறவுப் பாலமாகவும் தன் பணியை தொடர்கிறது.

இந்த பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், முன்னாள் போசகர்களினதும் தலைவர்களினதும் உறுப்பினர்களினதும் தன்னலமற்ற தொண்டும், ஒற்றுமையும், அர்ப்பணிப்பும், சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வலுவூட்டியிருக்கின்றன. அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இன்றைய செயற்குழுவும் உறுதியாக செயல்பட்டு வருகின்றது.

சங்கத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு மலர் வெளியீட்டின் பின், கடந்த 18 ஆண்டுகளுக்கான நமது பயணத்தின் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை இச்செயற்குழு உணர்ந்ததின் வெளிப்பாடே இந்த 30 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர். இந்த மலர், எமது கடந்த கால (1995 தொடக்கம் 2025 வரையான) நினைவுகளையும், சேவைகளையும், சாதனைகளையும் பதிவு செய்யும் ஒரு வரலாற்றுச் சான்றாக இருக்கும் என திடமாக நம்புகிறேன்.

இந்த மலருக்காக தகவல், புகைப்படங்கள், ஆதாரங்கள், ஆலோசனைகள் வழங்கிய அனைத்து முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களுக்கும், மேலும் மலருக்கு வாழ்த்துச் செய்தி மற்றும் ஆக்கங்கள் தந்துதவியவர்களுக்கும், மலர் உருவாக்கத்திற்கு உதவிய தட்டச்சு செய்தவர்களுக்கும், வடிவமைப்பாளர்களுக்கும், மெய்ப்பு நோக்குதல் புரிந்தவர்களுக்கும், முக்கியமாக மலர் வெளியிடுவதற்கு உதவிய விளம்பரதாரர்களுக்கும், அத்துடன், 30 ஆவது ஆண்டு நிறைவு ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமை்ப்பு செய்த உதவிச் செயலாளர் திரு. முரளிதரன் கதிர்காமநாதன் அவர்களுக்கும், செயற்குழு உறுப்பினர்களின் உதவியினூடாகக் கிடைக்கப்பெற்ற விளம்பரதாரர்களின் தகவல்களை ஒருங்கிணைத்து நிர்வகித்த உதவிப் பொருளாளர் திரு. சுதர்சன் முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கும், ஒன்றுகூடல் நுழைவுச்சீட்டுகளை செயற்குழு உறுப்பினர்களின் உதவியுடன் பழைய மாணவர்களின் கைகளில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்த பொருளாளர் சிவா ஞானப்பிரகாசம் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சிறப்பான தருணத்தில், 2026 ஆம் ஆண்டு, எமது கல்லூரி 150 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்க இருப்பதை பெருமையுடன் நினைவூட்டி எமது எதிர்கால செயற்குழுக்களுக்கும் உங்களது ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு பழைய மாணவர்களையும், பழைய மாணவர்களின் குடும்பத்தினர்களையும், நலன் விரும்பிகளையும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றியுடன்,

ததீஸ்வரன் சிவசுப்பிரமணியம்

Page 16