தலைவரின் செய்தி

சுரேஸ் தர்மலிங்கம்

தலைவர், யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் - கனடா

### தலைவரின் செய்தி நாம் எமது முப்பது வருட நிறைவினைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் !!! இத்தருணத்தில் கல்லூரியில் வீற்றிருக்கும் சிவகாமிசமேத நடராஜப் பெருமானை வணங்கி எனக்கு கிடைத்த இந்த வாய்ப்புக்கு நன்றி கூறுகின்றேன். இந்த மூன்று தசாப்தகால பயணமானது சாதாரணமாக கடந்துசென்ற ஒரு காலகட்டமல்ல, எமது கனடா பழைய மாணவர்களது அர்ப்பணிப்பு, பலம் மற்றும் ஒற்றுமை மூலமாகவே இது சாத்தியமானது. முதற்கண் எமது சங்கத்தை ஆரம்பகாலம் முதல் இன்றுவரை கட்டுக்கோப்புடன் வழிநடாத்தி வந்த 12 நிர்வாக சபைகளையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் எம்மைவிட்டுப் பிரிந்த உறுப்பினர்களையும் நாம் நினைவில் கொள்வோம். இதுவரை காலமும் எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு எம்மாலான பங்களிப்பை வழங்கியுள்ளோம். நிதியுதவி, கற்றலுக்குரிய வளங்களை வழங்கல் மற்றும் மேலதிக திறமைகளை ஊக்குவித்தல் என பல வழிகளில் எமது கல்லூரி மாணவர்களுக்கு உதவி வந்துள்ளோம். இதை வரும் காலங்களிலும் தொடருவோம். எமது சாதனைகளைப் பிரதிபலிக்கும் இத்தருணத்தில் நாம் எமது எதிர் காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். எமக்குள்ள பெரிய சவால் இந்த அமைப்பை எவ்வாறு அர்த்தமுள்ள ஒரு அமைப்பாக இன்னும் ஐம்பது நூறு வருடங்களுக்கு தக்கவைத்துக் கொள்வது. அதை அடைவதற்கு இந்த இரண்டு பாதைகள் உறுதுணையாக இருக்கும் என நான் நம்புகிறேன்: 1. **அடுத்த தலைமுறையினரை உள்வாங்குதல்** - கனடாவில் பிறந்த எமது அங்கத்தவர்களது பிள்ளைகளை அங்கத்தவர்களாக இணைப்பதற்குரிய காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன். அவர்களது கல்வி அறிவு, அனுபவம் எமது அமைப்பை புத்துணர்ச்சி பெறச்செய்து பொலிவுடன் தொடர்ந்து செயற்பட வழிசமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 2. **அடுத்த தலைமுறையினரை கல்லூரியுடன் இணைத்தல்** - எமது உறுப்பினர்களது பிள்ளைகளுக்கும் எம் கல்லூரிக்கும் இடையில் ஒரு நிரந்தர பந்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் கல்லூரியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பை வழங்கலாம். குறிப்பாக தலைமைத்துவ பயிற்சி புதிய தொழில்நுட்பம், புதியபாட விதானங்கள், விளையாட்டு பயிற்சி போன்ற விடயங்களில் புலம்பெயர் அடுத்த தலைமுறையினர் தமது பங்களிப்பை வழங்க வழி செய்யலாம். தமது தளராத உழைப்பின் மூலம் எமது 30 ஆவது வருட ஒன்றுகூடலினை சிறப்புற ஒழுங்கமைத்து இச் சிறப்பு மலரினையும் வெளியிட்ட தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு எனது நன்றிகளை சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறேன். நெஞ்சம் நிறைந்த நன்றியுடன், சுரேஸ் தர்மலிங்கம்

தலைவரின் செய்தி

தலைவரின் செய்தி

சுரேஸ் தர்மலிங்கம்

தலைவர், யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் - கனடா

நாம் எமது முப்பது வருட நிறைவினைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் !!! இத்தருணத்தில் கல்லூரியில் வீற்றிருக்கும் சிவகாமிசமேத நடராஜப் பெருமானை வணங்கி எனக்கு கிடைத்த இந்த வாய்ப்புக்கு நன்றி கூறுகின்றேன்.

இந்த மூன்று தசாப்தகால பயணமானது சாதாரணமாக கடந்துசென்ற ஒரு காலகட்டமல்ல, எமது கனடா பழைய மாணவர்களது அர்ப்பணிப்பு, பலம் மற்றும் ஒற்றுமை மூலமாகவே இது சாத்தியமானது. முதற்கண் எமது சங்கத்தை ஆரம்பகாலம் முதல் இன்றுவரை கட்டுக்கோப்புடன் வழிநடாத்தி வந்த 12 நிர்வாக சபைகளையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் எம்மைவிட்டுப் பிரிந்த உறுப்பினர்களையும் நாம் நினைவில் கொள்வோம்.

இதுவரை காலமும் எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு எம்மாலான பங்களிப்பை வழங்கியுள்ளோம். நிதியுதவி, கற்றலுக்குரிய வளங்களை வழங்கல் மற்றும் மேலதிக திறமைகளை ஊக்குவித்தல் என பல வழிகளில் எமது கல்லூரி மாணவர்களுக்கு உதவி வந்துள்ளோம். இதை வரும் காலங்களிலும் தொடருவோம்.

எமது சாதனைகளைப் பிரதிபலிக்கும் இத்தருணத்தில் நாம் எமது எதிர் காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். எமக்குள்ள பெரிய சவால் இந்த அமைப்பை எவ்வாறு அர்த்தமுள்ள ஒரு அமைப்பாக இன்னும் ஐம்பது நூறு வருடங்களுக்கு தக்கவைத்துக் கொள்வது. அதை அடைவதற்கு இந்த இரண்டு பாதைகள் உறுதுணையாக இருக்கும் என நான் நம்புகிறேன்:

  • அடுத்த தலைமுறையினரை உள்வாங்குதல் - கனடாவில் பிறந்த எமது அங்கத்தவர்களது பிள்ளைகளை அங்கத்தவர்களாக இணைப்பதற்குரிய காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன். அவர்களது கல்வி அறிவு, அனுபவம் எமது அமைப்பை புத்துணர்ச்சி பெறச்செய்து பொலிவுடன் தொடர்ந்து செயற்பட வழிசமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
  • அடுத்த தலைமுறையினரை கல்லூரியுடன் இணைத்தல் - எமது உறுப்பினர்களது பிள்ளைகளுக்கும் எம் கல்லூரிக்கும் இடையில் ஒரு நிரந்தர பந்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் கல்லூரியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பை வழங்கலாம். குறிப்பாக தலைமைத்துவ பயிற்சி புதிய தொழில்நுட்பம், புதியபாட விதானங்கள், விளையாட்டு பயிற்சி போன்ற விடயங்களில் புலம்பெயர் அடுத்த தலைமுறையினர் தமது பங்களிப்பை வழங்க வழி செய்யலாம்.
  • தமது தளராத உழைப்பின் மூலம் எமது 30 ஆவது வருட ஒன்றுகூடலினை சிறப்புற ஒழுங்கமைத்து இச் சிறப்பு மலரினையும் வெளியிட்ட தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு எனது நன்றிகளை சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெஞ்சம் நிறைந்த நன்றியுடன்,

    சுரேஸ் தர்மலிங்கம்

    Page 14